கோவை : கோவையை சேர்ந்த வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் கொடுத்த புகாரில் தங்களுடைய தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு தெரியாமல் யாரோ PORT செய்து அதன் மூலம் ஆன்லைனில் தனது கிரடிட் கார்டு மற்றும் லோன் அப்ளிகேஷனிலிருந்து பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்கள் 42/2022, 64/2023, 65/2022 7/2023 u/s 465, 468, 471, 419, 420 IPC 66C 66D IT Act ல் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை மேற்க்கொண்டு காவல் -ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி வழக்கின் குற்றவாளியான விக்னேஷ் (31) என்பவரை இன்று (21.02.2023) காவல் ஆய்வாளர் திரு P.A. அருண், உதவி ஆய்வாளர் M. சிவராஜ பாண்டியன் மற்றும் சைபர் கிரைம் ஆளினர்களுடன் கோவைப்புதூரை சேர்ந்த காளிமுத்து மகன் விக்னேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி விக்னேஷ் தன்னுடன் பழகி வந்த நண்பர்களின் ஆவணங்கள் மற்றும் மொபைல் நம்பர்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு அவர்களின் தொலைபேசி எண்களை அவர்களுக்கு தெரியாமல் போர்ட் (PORT) செய்து மேற்படி எண்களை பயன்படுத்தி அவர்களின் வங்கி கடன் அட்டை கணக்குகள் மற்றும் ONLINE LOAN APPLICATION லிருந்து மூலம் பணம் பெற்று மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய மொபைல் போன்கள் மின்னணு சாதனங்கள் பல்வேறு சிம்கார்டுகள் வாகன உரிமங்கள் கார்கள் 3, empty electronic chipset cards ஆகியவற்றை குற்றவாளியிமிடமிருந்து பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேற்படி இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்மாறு அறிவுருத்தப்படுகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்