சென்னை : சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த திரு.மனிஷ்குப்தா என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் MENX HER என்ற இணைய தளம் மூலமாக அடையாளம் தெரியாத நபரால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் , அதன் மூலம் ரூ .16,50,993 /- இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் கொடுத்த புகாரின் பேரில் , சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கீதா தலைமையிலான தனிப்படையினர் விசாரணை செய்து இணைய தளம் மூலமாக டேட்டிங் நடத்துவதாக விளம்பரம் செய்து ரூ.16,50,993/- ஏமாற்றிய தம்பதி 1.திபான்கர் காஸ்நாவிஸ் , 2.யாசிம் கான் ரசூல் பெக் ஆகியோரை மும்பையில் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
