திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.N.கோட்டீஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில், ஆரணி கிராமிய காவல் ஆய்வாளர் திரு.V.J.முத்துக்குமார் அவர்களின் தலைமையில், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.சத்தியநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள் இணைந்து, நடத்திய தேடுதல் வேட்டையில் வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (55), வடுகசாத்து கிராமம் யாதவர் தெருவைச் சேர்ந்த கோகுல் (18),ஆகிய இரண்டு நபர்களும் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை கைது செய்து, ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ஹான்ஸ் – 310 பாக்கெட், விமல் பான் மசாலா – 1260 பாக்கெட், கூல் லிப் – 588 பாக்கெட் , A1 பாக்கு – 1260 பாக்கெட் என மொத்தம் 18776 ரூபாய் மதிப்பிலான 16 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.