அரியலூர் : அரியலூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் தெருவில் அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினரால் குட் சமரிடன் குறித்து விழிப்புணர்வு பதகை வைக்கப்பட்டது.
விபத்துக்குள்ளானவர்களுக்கு முதல் ஒரு மணி நேரம் Golden Hour என அழைப்பர்கள். அவ்வாறு உதவும் நல்ல இதயங்களுக்கு சட்டம்விழிப்புணர்வு பாதுகாப்பு அளிக்கிறது. விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவி செய்வதால் தங்களுக்கு எந்த இடையூறும் வராது, என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் கூறுகிறார்கள்.
விபத்தில் சிக்கியவர்க்கு உதவியவர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் துறையில் சார்பில் குட் சமரிடன் நற்சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. போக்குவரத்து காவல்துறை காவல் ஆய்வாளர் திரு.S.மதிவாணன் அவர்கள் இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்தார்.