சென்னை : தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு சார்பாக காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆளிநர்களுக்கு சத்து பானம் மற்றும் பொருட்கள் வழங்கினர். டாக்டர் பிரதீப் வி.பிலிப், இ.கா.ப., தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இணைந்து தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு மற்றும் துரை பவுன்டேசன் சார்பாக, இன்று 21.05.2020 காலை இராயப்பேட்டை, மியூசிக் அகாடமி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு சத்து பானங்கள் (Energy Drinks) மற்றும் Candid Dusting Powder போன்ற பொருட்களை வழங்கினர்.