நாகப்பட்டினம் : காவலர் நண்பர்கள் குழுவினர் “பொதுமக்களுக்கும் சமுதாயத்திற்கும் இணைப்பு பாலமாகவும்,காவல் துறைக்கு கண்கள் மற்றும் காதுகளாக செயல் பட வேண்டும்” என தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் J.லோகநாதன், இகாப. அவர்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இகாப.,அவர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டார்கள்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவலர் நண்பர்கள் குழுவிற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று( 28.11.2019) மாவட்ட காவல் அலுவலகம் அருகில் உள்ள யாழிசை அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் J.லோகநாதன், இகாப., அவர்கள் முன்னிலையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இகாப., அவர்களின் தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்வில் பேசிய தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் “காவலர் நண்பர்கள் குழுவினர் இதன் மூலமாக காவல்துறை குறித்து நன்கு அறிந்து கொள்ள முடியும் எனவும் மேலும் தங்களின் ஆளுமை திறனை வளர்த்து கொள்ள கூடிய ஓர் நல்ல வாய்ப்பு எனவும் சமூக அக்கறையுடன் செயல்பட்டு குற்றம் நடவாமல் தடுக்க முடியும் என கூறினார்கள்”.
பின்னர் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் “காவலர் நண்பர்கள் குழுவினர் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இணைப்பு பாலமாக இருக்க வேண்டும் இதன் மூலம் பெரிய அளவிலான சட்டம் ஒழுங்கு பிரச்சனை தடுக்கப்படும் எனவும், இது போன்று சமூக அக்கறையுடன் காவலர் நண்பர்கள் குழுவினர் செயல்பட்டால், தமிழகத்திலே பெரிய அளவிலான குற்றங்கள் நிகழாத மாவட்டமாக நமது நாகப்பட்டினம் மாவட்டத்தை மாற்ற முடியும் எனவும் காவலர் நண்பர்கள் குழுவினர் காவல் துறைக்கு கண்கள் மற்றும் காதுகளாக செயல் பட வேண்டும் இதுவே எனது நோக்கம் என்றும் கூறினார்கள்” .
மேலும் காவலர் நண்பர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு போட்டி தேர்விற்கு எவ்வாறு தயாராகுவது எப்படி அரசு வேலைக்கு செல்வது என்று அதற்கான உரிய வழிகாட்டுதல் செய்து தரப்படும் எனவும் மேலும் மாவட்டம் முழுவதும் காவலர் நண்பர்கள் குழு சேர்க்கை முகாம் உட்கோட்டம் வாரியாக விரிவு படுத்தப்படும் என்றும் சேர்க்கை முகாமில் கலந்து கொண்ட 330 க்கும் மேற்பட்ட காவலர் நண்பர்கள் குழுவினர் மத்தியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்கள் , காவலர் நண்பர்கள் குழு நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. முஜிபு ஷரீக் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாகப்பட்டினம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.முருகவேல் அவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர்கள் , காவல் ஆளிநர்கள் ஆகியோர் உடன் இருந்து சிறப்பாக நிறைவு செய்தனர்.
நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்