நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 22.01. 2022 சனிக்கிழமை மதியம் 1:00 மணி அளவில் சாலையோரம் வசிக்கும் 600 மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காவல் உதவி ஆணையர் எழும்பூர் சரகம் மதிப்புக்குரிய திரு. ரகுபதி அவர்கள் கலந்து கொண்டு உணவு வழங்கினார். காவல் உதவி ஆய்வாளர் திரு.கார்த்திகேயன், காவல் உதவி ஆய்வாளர் திரு. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல் உதவி ஆணையர் எழும்பூர் சரகம் அலுவலகம் பந்தெய்ன் ரோடு, சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு, கைகளை சுத்தப்படுத்தி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம், வெஜிடபிள் பிரியாணி, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
உலகம் எங்கும் கொரானா என்னும் கொடிய அரக்கன் மக்களை கொன்று குவிக்கும் இந்த தருணத்தில், பொதுமக்களை பிணி அண்டாமல், காக்கவேண்டி இரவு பகல் பாராமல் உணவின்றிஇ உறக்கமின்றி, விழிகளைக் காக்கும் இமைகள் போல சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடி வரும் காவல்துறையினர் அவர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தி காவல் உதவி ஆணையர் எழும்பூர் சரகம் திரு. ரகுபதி அவர்கள் மிகுந்த பணி சிரமங்களுக்கு இடையே உணவு வழங்கல் நிகழ்ச்சியில், ஆர்வமுடன் கலந்து கொண்டு உணவு வழங்கினர்.
காவல் உதவி ஆணையர் திரு. ரகுபதி அவர்கள் அவர்களின் வழிகாட்டுதலின்படி, எழும்பூரின் பல இடங்களில் பொது மக்கள் மற்றும் பலதரப்பட்ட வாகனஓட்டிகள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களிடையே போக்குவரத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். காவல் உதவி ஆணையர் திரு. ரகுபதி அவர்கள் சமூக சேவை என்றால், தனக்கு கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தையும் பொருட்படுத்தாமல், ஆர்வமுடன் கலந்து கொள்ளும் சுபாவம் உடையவர்.
காவல் உதவி ஆணையர் எழும்பூர் சரகம் அலுவலகம் பந்தியன் ரோடு, சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு, கைகளை சுத்தப்படுத்தி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம், வெஜிடபிள் பிரியாணி தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. உணவினை பெற்று கொண்டவர்கள் வயிறாற உண்டு மனதார வாழ்த்தினர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, மாநில வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இரவு பகல் பாராமல், ஏழைகளுக்காக சிறப்பாக இப்பணியினை செய்து வருகின்றனர்.