திருவள்ளூர் : இந்தியாவில் உள்ள அனைத்து மாநில காவல் துறைகளில் தமிழக காவல்துறைக்கு (Tamil Nadu Police) தனிச்சிறப்பு உண்டு. அர்ப்பணிப்பு, கண்டிப்பு, திறமையான புலனாய்வு, கண்ணியம் என பல தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டது தமிழக காவல்துறை.
சமீப கலாங்களில் பொது மக்களுக்காக காவல்துறை ஆற்றிவரும் தன்னலம் கருதா தொண்டுகள் பலரால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், இந்த கொரோனா (Corona) காலத்தில் முன்னணி வீர்ரகளாக, தங்களைப் பற்றி கவலைக் கொள்ளாமல் காவல் துறை வீரர்கள் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறை செலுத்தி வருவதை நாம் தினமும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
காவல் துறையையும், காவல் துறையினரையும் பிரித்து பார்க்க இயலாது. காரணம், அவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டையும், சமூகத்தில் உள்ள அனைவரும் கூர்ந்து கவனிக்கின்றனர். கணித்து, மதிப்பிடுகின்றனர். நல்லாட்சி புரிய, காவல்துறையினரின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தினமும், 24 மணி நேரமும், மக்களோடு மக்களாக காவல்துறையினர் சேவையாற்றி வருகின்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று முகம் மற்றும் பாண்டியன் படங்களில் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பாண்டியன் போன்ற கதாப்பத்திரங்கள் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. இக்கதாப்பாத்திரங்கள் போல், வீரமான போலீஸ் அதிகாரியாக, வலம் வருபவர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரை பாண்டியன் அவர்கள். தற்போது காட்பாடியில் இருந்து திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் இவருக்கு புதிது அல்ல. ஏற்கனவே திருவள்ளூரில் பணியாற்றி உள்ளார். மீண்டும், திருவள்ளூரில் பணியை தொடர்வது, அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் திறமைக்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் இவர் பெறப் போகின்றார் என்பது கூடுதல் சிறப்பு.
செய்தி வாசிப்பாளர் to போலீஸ் ஆதரவாளர்
பிரபல செய்தி வாசிப்பாளர் டாக்டர் திருமதி. ஈவ்லின் அவர்கள் இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். இவர் தமிழ் செய்தி வாசிக்கும் போது காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கும். போலீசுக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக, தன்னை சமுதாய சேவைக்காக ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய செய்தி வாசிக்கும் வேலையை குறைத்துக்கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். மான் போன்று சாது குணம் படைத்தவர் மற்றும் இளகிய மனம் கொண்டவர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் வடக்கு மண்டல தலைவியும், பிரஜோஷ் சாரிட்டியின் நிறுவனருமான உள்ள டாக்டர்.ஈவ்லின் மற்றும் குழுவினர் நேற்று காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரைபாண்டியன் அவர்கள் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்கள். இதில் திரு. கிட்டார் சாம், திரு. சந்திர சேகர், ஜாக் டேனியல், சீனிவாசன் மற்றும் திரு .முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.