திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்யுமாறு உத்தவிட்டார். அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் உத்தரவின்படி, அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு. இளங்கோ, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சதாசிவம், அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சரஸ்வதி, காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சாலையோரம் தங்கியிருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு, பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்கள்.
மேலும் சாலையோரம் தங்கியிருக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் தங்க ஏற்பாடு செய்து, அவர்களை காவல்துறையினரே அழைத்து சென்று தங்க வைத்து பாதுகாப்பு அளித்தனர்.
மேலும் அப்பகுதியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடம் 144 தடை உத்தரவு குறித்து குறித்தும், கொரானா நோய் குறித்தும், அது பரவும் விதம் குறித்தும், தெளிவாக எடுத்துரைத்து, தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சுமார் 150 முக கவசங்கள் வழங்கப்பட்டது.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல், நோய் பரவும் இக்கட்டான சூழ்நிலையிலும் மக்கள் நலனுக்காக காவல்துறையினர் உயிரை பணையம் வைத்து பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்