திண்டுக்கல்: பரவிவரும் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது,அதன் ஒரு தொடர்ச்சியாக தற்போது முழு ஊரடங்கினை அறிவித்துள்ளது தமிழக அரசு.
இந்நிலையில் முழு ஊரடங்கினை மக்கள் முழுமையாக கையாள உற்றத் துணையாக இருப்பது நமது தமிழக காவல்துறை தான். அப்பணியை திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திரு.முத்துசாமி IPS அவர்கள் வெகுசிறப்பாக செய்து வருவதாக பொதுமக்களிடையே பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பார்வையிட்டதில், திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திரு முத்துசாமி அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளை சரியான முறையில் திட்டமிட்டு, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் ரோந்து பணியின் போது அனைத்து தரப்பு மக்களையும், அவரவர் வசிக்கும் பகுதிக்கே சென்று தேவைகளை கேட்டறிந்து, தன்னார்வத்தோடு செய்து வருகிறார்.
மேலும் ஊரடங்கின் போது முக்கிய பகுதிகளில் காவல்துறையினரை அதிகப்படுத்தி, கொரோனா தொற்று பரவாமல் இருக்க தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் கொரோனா 2-ம் அலை பரவி வரும் இச்சூழலில் பேருந்து நிலையம், தாராபுரம்ரோடு, ரவுண்டானா, செக்போஸ்ட், நான்கு வழிச்சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் அதிகமான காவல்துறையினர் களப்பணியில் அமர்த்தி, முறையாக கண்காணித்து வருகிறார்.
ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறுகிற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இ-பதிவு அனுமதி பயணச்சீட்டு இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக்கூடிய வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்களுக்கு போனதுமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அவ்வப்பொழுது வழங்கி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S. ராகுல்