திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் 03.10.2020 அன்று திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி,IPS அவர்கள் கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு பணி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். உடன் கொடைக்கானல் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.ஆத்மநாதன், மற்றும் ஆய்வாளர் திரு.முத்து பிரேம்சந்த் அவர்களும் இருந்தனர். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் நட்டு வைத்தனர்.
இதனை அடுத்து பிரையண்ட் பூங்கா பகுதியில் Kodai green peace charitable trust சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் திண்டுக்கல் சரக காவல் துறை துணைத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பற்றியும், அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது பற்றியும், சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்து அவர்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி தெளிப்பான் ஆகியவற்றை வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா