சென்னை: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறை இயக்குநர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், இ.கா.ப., அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சாந்தி இ.கா.ப., அவர்களின் நேரடி மேற்பார்வையில், கோவை உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரவிக்குமார், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
Know Your Criminals (KYC) அடிப்படையில் குற்றவாளிகளின் தகவல்களை சேகரித்து சிறப்பு அதிரடி சோதனை மேற்கொண்டதில், இன்று 22.11.2019 ஆம் தேதி அதிகாலை 4.00 மணியளவில் கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடியில், வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது KA 01 AD 7155 என்ற டாரஸ் லாரியில் சுமார் 17 டன் தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியை கடத்தி வந்த KYC குற்றவாளி, ஈரோடு தீபக் குமார் என்பவரின் வாகன ஓட்டுனர் அஜித் குமார் கைது செய்யபட்டார்.
மேலும் தொடர்ந்து வாகனத் தணிக்கை செய்ததில் சுமார் 11:00 மணியளவில் வேலூரில் இருந்து வந்த வாகன எண் TN 23 P 9699 டாரஸ் லாரியில் சுமார் 20 டன் தமிழக அரசின் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசியை கடத்தி வந்த KYC குற்றவாளி தாமோதரன் மற்றும் வாகன ஓட்டுநர் சிவப்பிரகாசம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சிறப்பு அதிரடி சோதனை வேட்டையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கர்நாடகாவிற்கு கடத்தி சென்ற 50 டன் ரேஷன் அரிசி மற்றும் 3 டாரஸ் லாரிகள், 1 பொலிரோ பிக்அப் வேன், மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறை இயக்குனர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், இ.கா.ப., குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அவர்களால் நியமிக்கப்பட்ட தனிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.