வேலூர்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறை இயக்குனர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், ஐபிஎஸ் அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல் கண்காணிப்பாளர் திருமதி எஸ் சாந்தி ஐபிஎஸ் அவர்களின் நேரடி மேற்பார்வையில், சென்னை உட்கோட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.மா.ஜீவானந்தம், சென்னை தலைமை இடத்தில் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.C. வேலு, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை திருவள்ளூர் காவல் ஆய்வாளர், திரு. மைனர் சாமி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை வேலூர், காவல் ஆய்வாளர் திரு செல்வகுமார், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறை இயக்குனர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப் ஐபிஎஸ் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள “குற்றவாளிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்” திட்டத்திற்காக, மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் வாகன சோதனை:
குற்றவாளிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் (Know your Criminal) அடிப்படையில் குற்றவாளிகளின் தகவல்களை சேகரித்து, சிறப்பு அதிரடி சோதனை நடத்தியதில், இன்று 21 .11. 2019 ஆம் தேதி மதியம் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர் மோட்டூர் என்ற இடத்தில் வாகன தணிக்கை செய்த கொண்டிருந்தபோது, லாரியில் சுமார் 18.5 தமிழக அரசின் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அரசியை கைப்பற்றிய காவல்துறையினர், வேலூரை சேர்ந்த தனபால் மற்றும் ஓட்டுநர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
லாரியில் இருந்த குற்றவாளி வேலூரை சேர்ந்த தனபால் மற்றும் வாகனத்தின் ஓட்டுநர் குமார் ஆகியோரை கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தமிழக அரசின் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசியை கடத்தியதற்காகவும், மற்றொரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனம் கைப்பற்றப்பட்டது.
பள்ளிகொண்டா சோதனை:
மற்றொரு வாகன சோதனையில், குற்றவாளி பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது வீட்டில் தமிழக அரசின் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. சோதனையில் சுமார் 23 தமிழக அரசின் பொதுவிநியோகத் திட்ட ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்