சென்னை : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்த. இதனையடுத்து சென்னையின் சுற்று வட்டார பகுதிகளான முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல், சிரமத்திற்கு ஆளாகினர். தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று அப்பகுதி மக்களை மீட்டு வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் என்ற பகுதியில் ரப்பர் படகு மூலம் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். இதனையடுத்து காவல்துறை தலைமை இயக்குநர். உயர்திரு. எம்.எஸ். ஜாஃபர் சேட், இ.கா.ப அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா