கோவை : கோவை மாநகர துணை ஆணையாளர் திரு.ஸ்டாலின் தலைமையில் அன்று 13.5.2021 கோவை மாநகரில் கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தியும், மக்களுக்கு அறிவுரை கூறியும், தேவையில்லாமல் சுற்றும் நபர்களை எச்சரித்து அனுப்பினார்.
மேலும் சாலையில் சுற்றி திரிந்த நபர்களை அழைத்து அறிவுரை வழங்கினார். முழு முடக்கம் அறிவிக்கப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் தேவையேஇல்லாமல் வெளியே சுற்றுவதை சாலைகளில் பார்க்க முடிகிறது. மிகஅவசியம் இல்லாமல் யாரும் தயவு செய்து வெளியே வர வேண்டாம்.
அரசு முடிந்தவரை நடவடிக்கைகளை எடுத்தாலும், தனிப்பட்ட ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு இல்லாமல் இதனை முழுமையாக தடுக்க முடியாது.
நமது உயிரின் முக்கியத்துவம் நமக்கே தெரியும், எனவே சட்டத்துக்காக மட்டும் இல்லாமல் நம் வாழ்கையின் திட்டங்களுக்காக கட்டுபாடுகளை கடைபிடிப்போம். மிகக்கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்.
நமது அலட்சியமே கொரனா தொற்றுக்கு முக்கிய காராணமாகிவிடும்.கூடிப் பேசுவதை தவிர்ப்போம்.
இருமும்போதும் தும்மும்போதும் முகக்கவசம் இருந்தாலும் வாயை கைகளால் மூடவேண்டும்.
என்று கூறினார்.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்