தஞ்சை : தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை கடைத்தெருவில் உள்ள ஒரு இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக பாபநாசம் துணை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி, அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து இதில் சம்பந்தபட்டவர்களை உடனடியாக இனம் கண்டு கைது செய்யுமாறு அய்யம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடைப்படையில் நேற்று (27- 1-2023), அய்யம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா , உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் குமார் தலைமையில் காவலர்கள் திரு.அருண் மற்றும் திரு.கார்த்திக் ஆகியோர் கொண்ட போலீசார்கள் அய்யம்பேட்டை கடைவீதியில் உள்ள காம்ப்ளக்ஸில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த இஸ்லாமிய தம்பதியினரான முகமது ரஃபீக் (48), அவரது மனைவி மும்தாஜ் பேகம் (44), ஆகியோரை கைது செய்து , அவர்கள் ஆன்லைன் லாட்டரி வியாபாரத்திற்கு பயன்படுத்திய லாப்டாப் ஒன்று , செல்போன்கள் மூன்று மற்றும் பணம் ஐந்தாயிரம் ரூபாய் ஆகியவற்றை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து அய்யம்பேட்டை போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்