திண்டுக்கல்: திண்டுக்கல் ரூரல் டி.எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக திண்டுக்கல் புறநகர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக திரு.அருண் கபிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி திரு.சுகுமார் நிலக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.நிலக்கோட்டை டி.எஸ்.பி திரு.முருகன் மாவட்ட குற்றப்பதிவேட்டு கூடத்துக்கும்,அங்கு பணியாற்றிய திரு.ஜஸ்டின் பிரபாகரன் மதுரை ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















