திருச்சி : தமிழ்நாடு காவல்துறை சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணிபுரியும் பணி ஓய்வு பெற்ற ஆளுநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் காவல் படை தலைவர் முனைவர் திரு.சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்களின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் திருச்சி மாநகரம் மற்றும் மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் திருச்சி ஒன்றாம் தமிழ்நாடு சிறப்பு காவலனி ஆகியவற்றைச் சார்ந்த காவல்துறை சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள்துறையில் பணிபுரியும் ஆளுநர்களின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர். இவ்வேளை வாய்ப்பு முகாமில் ஆண்கள்- 186 பெண்கள்- 161 ஆக மொத்தம் -347 நபர்கள் கலந்து கொண்டனர் இதில்- 73 நபர்கள் நேரடி பணி நியமனம் செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மற்றும் -151 நபர்கள் முதல் கட்டமாக (provisionally selected) தேர்வு செய்யப்பட்டு அடுத்த கட்ட தேர்வுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் நாளை வேலைவாய்ப்பு முகாம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற உள்ளது என மதிய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்