ரயிலில் அமர்ந்திருந்த பயணியிடம் வழிப்பறி:
மதுரை: மதுரையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் மதுரை ரயில்வே நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் இருவர் ரயில்வே தண்டாவளத்தின் வழியாக வந்து ரயிலில் ஏறி, தங்கசெயின் மற்றும் அவரிடமிருந்த கைபேசியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனராம். விசாரணையில், திண்டுக்கல் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா என்ற ரயில்வே ஊழியரிடம் இரண்டரை பவுன் தங்க செயின் மற்றும் செல்போனை வழிப்பறி செய்து விட்டு தப்பியோடியவர் களை பற்றி ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
முனி சாலையில் லோடுமேனை கல்லால் தாக்கிய மற்றொரு லோடுமேன் கைது
மதுரை லோடுமேனை கல்லால் தாக்கி மற்றொரு லோடுமேனை போலீசார் கைது செய்தனர்.
செல்லூர் ஜீவா ரோடு லெனின் தெருவை சேர்ந்தவர் குருவன் 42. மதுரை கீழத்தோப்புவை சேர்ந்தவர் முத்துவீரன் 32. இருவரும் லோடு மேனாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் குருபன் வேலைக்குச் செல்லும்போது முத்துவீரனை அழைத்து செல்லவில்லை என்று குற்றம் சாட்டி அவரிடம் தகராறு செய்துள்ளார். இதில் வாய் தகராறு முற்றிய நிலையில் முத்துவீரன் கல்லை எடுத்து குருபனை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து குருபன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவீரனை கைது செய்தனர்.
அவனியாபுரத்தில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் எஸ் எஸ் கே தெருவை சேர்ந்தவர் மாலதி 19.இவர் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கழிவுநீர் தொட்டி அருகே நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் மாலதி வைத்திருந்த ரூபாய் 5ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வழிப்பறி செய்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து மாலதி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
அவனியாபுரத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது
மதுரை தெப்பக்குளம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் குமரவேலு மகன் பாலமுருகன் 25. இவர் வில்லாபுரம் சௌடேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் சென்ற போது அவரை வழிமறித்த ஒருவர் அவர் வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து பாலமுருகன் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல்போன்பறித்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்எஸ்கே தெருவைச் சேர்ந்த அபூபக்கர்51 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
திருமங்கலம் விவசாய கூட்டுறவு சங்கத்தில் ரூபாய் 5 லட்சம் மோசடி செய்த மருந்தாளுநர் கைது
மதுரை திருமங்கலம் விவசாய கூட்டுறவு சங்கத்தில் ரூ 5 லட்சம் மோசடி செய்த மருந்தாளுநரை போலீசார் கைது செய்தனர் . திருமங்கலம் விடத்தகுலம் ரோடு கற்பகம் நகரில் அக்ரிகல்ச்சர் புரட்யூஸ்அன்ட புரொடியூசர் கோவாப்பரேடிவ் அசோசியேஷன் பொதுமேலாளர் பன்னீர்செல்வம். இவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் இந்த கூட்டுறவு சங்கத்தின் கோவாபரேடிவ் மெடிக்கல் ஷாப் திருமங்கலம் கிளையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வருகிறார் திருமங்கலம் கோர்ட்ரோடுவை சேர்ந்த வசந்தகுமார் 40 .இவர் 2019 பிப்ரவரி மாதத்திலிருந்து 2019 டிசம்பர் வரையில் போலியான ஆவணங்களை தயாரித்து தரக்குறைவான மருந்துகளை வாங்கி விற்பனை செய்து அரசாங்கத்திற்கு ரூபாய் 4 லட்சத்து 70 ஆயிரத்து 745 மற்றும் பதினோரு பைசா மோசடி செய் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த விவசாய கூட்டுறவு சங்கத்தின் மருந்தாளுநர் வசந்தகுமாரை கைது செய்தனர்.