திருச்சி மாநகரில் அவ்வப்போது வெளியூர்களில் இருந்து வந்து இங்கு தங்கி சட்டத்திற்கு புறம்பான பல்வேறு செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே இருப்பதால் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு. G. கார்த்திகேயன் இ.கா.ப., வீடு வாடகைக்கு விடுவோர்க்கு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;
வீடு வாடகைக்கு விடப்படும் என உங்கள் வீட்டில் உள்ள விவரங்களை ஆன்லைனில் சில ஆப்களில் பதிவிடும் பொழுது அதனை மோசடி நபர்கள் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதாவது உங்கள் தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு நான் குறிப்பிட்ட வேலையில் உள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் உங்கள் வீட்டிற்கு குடி வந்து விடுவேன் எனவும் உடனே வீடு வேண்டும் எனவும் கூறி மோசடி நபருடைய போலியான விவரங்களை (ஆதார் கார்டு, பான் கார்டு, ID Card) கொடுத்து உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, உங்களுடைய வங்கி கணக்கிற்கு மோசடி நபர் பணம் சரியாக உங்களுடைய வங்கி கணக்கிற்கு வந்து சேர்கிறதா என ஒரு குறிப்பிட்ட குறைந்த பணத்தை செலுத்தி உறுதி செய்த பின்னர் ஒரு லிங்க் ஐ அனுப்பி இந்த லிங்கை கிளிக் செய்து அந்த பணத்தை திருப்பி அனுப்புமாறு மோசடி நபர் கேட்பார் அதனை நம்பி அந்த லிங்க்கை தொடும் பொழுது நம் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணமும் மோசடி நபர்களால் திருடப்படும்.
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென திருச்சி மாநகர காவல் துறையினரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது போன்ற இணைய வழி மோசடி புகார்களுக்கு 155260 / 1930 என்ற எண்கள் மற்றும் https://cybercrime.gov.in/என்ற இணையதளம் வழியாகவும் தொடர்பு கொண்டு இதுபோன்ற மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related