கோவை : கோவை விமான நிலையத்தில், நேற்று CISF (CISF – Central Industrial Security Force) அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைத்து சமூக ஊடக தளங்களில் நாம் தரும் தகவல்களை எப்படி பாதுகாப்பது, தகவல் திருடும் செயலிகள் மற்றும் ஆபாச செயலிகளிலிடம் இருந்து பெற்றோர் கட்டுப்பாடு என்ற தேர்வு மூலம் நம் குழந்தைகளை பாதுகாப்பது, முழு மோசடிகள், இணைப்பு மோசடி, 2 படி அங்கீகாரம் போன்றவை குறித்தும் இவற்றிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது குறித்து கோவை காவல் ஆய்வாளர் திரு.அருண், தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் CISF அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்