கரூர்: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி ஜவஹர் பஜார் மற்றும் கரூர் – கோவை செல்லும் பகுதியில் உள்ள கடைகளில் கண்காணிப்பு கேமரா (C.C.TV) பொருத்துவதன் அவசியம் பற்றியும் மேலும் Cyber Crime விழிப்புணர்வை பற்றியும்.
நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.செந்தூர் பாண்டியன் மற்றும் நகர போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்களும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் சாலை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வாகனங்களையும் அப்புறப்படுத்தினர். உதவிகள் ஏதேனும் தேவைப்படும் பட்சத்தில் தங்களை தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி எண்களை கொடுத்து வந்துள்ளனர்.