கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் கடைவீதிகள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கிராம பகுதிகளுக்கு சென்று ஒமிக்ரான் வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் கூட்ட நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்றும், பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் முக்கியதுவத்தை எடுத்துக் கூறியும், இலவச முகக்கவசங்கள் வழங்கி வருகின்றனர்.
மேலும் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்