திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் எல்லைக்குட்பட்ட SBI ATM- ல் கடந்த மே மாதம் மருதாயி (60) என்பவரிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி அவரிடமிருந்து ரூ.56,000 பணத்தை திருடிய ஆபேல் (27) என்பவரை வேடசந்தூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் இ.ஆ.ப அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல்துறையினர் ஆபேலை மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா