திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்புழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி கோகிலதீபா, வயது/34 என்பவர் தனது தந்தையின் ATM கார்டு மூலம் பணம் எடுப்பதற்காக, கடந்த 01.09.2021 ஆம் தேதி செங்கத்தில் உள்ள SBI ATM- ல் பணம் எடுக்க சென்றதாகவும்,
அந்த ATM-ல் பணம் இல்லாததால், அருகிலிருந்த India No1 ATM-ல் பணம் எடுக்க சென்றதாகவும், அப்போது எனக்கு பணம் எடுக்கத் தெரியாததால்,
அங்கிருந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் எனக்கு பணம் எடுக்க உதவுவதாக கூறி ATM கார்டு மற்றும் ரகசிய எண்ணை வாங்கிக் கொண்டு ATM-ல் பணம் எடுக்க முயன்றதாகவும், பின்னர் அந்த நபர் ATM-ல் பணம் இல்லை எனக் கூறி உடனடியாக வேறு ATM- மிற்க்கு அனுப்பி விட்டதாகவும்,
ஆனால் எனது தந்தையின் ATM கார்டு மூலம் தலா 9,500/- இரண்டு முறையும் மற்றும் ஒரு முறை 1,000/- ரூபாய் என மொத்தம் மூன்று முறையாக 20,000/- ரூபாய் எனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து விட்டதாக, எனது தந்தையின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தது. இதை அடுத்து வங்கியில் சென்று விசாரித்த போது.
அந்த நபர் என்னிடம் எனது தந்தையின் ATM கார்டுக்கு பதிலாக வேறு போலி ATM கார்டை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்ததாக அளித்த புகாரையடுத்து செங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடி,
செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R.சின்ராஜ் அவர்களின் தலைமையில், செங்கம் வட்ட காவல் ஆய்வாளர் திரு.K.சரவணன், உதவி ஆய்வாளர் திரு.V.யுவராஜ் மற்றும் காவலர்கள் நடத்திய விசாரணையில் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அருகே உள்ள SBI ATM அருகே அந்த நபர் இருப்பது தெரியவந்ததையடுத்து,
அவரை பிடித்து விசாரணை செய்ததில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா, எரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மகன் நவீன்குமார், 27 என்பதும், அவர் ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அவலூர்பேட்டையில் இதேபோன்று ATM-ல் பணம் எடுப்பதற்கு உதவி:போல் ஏமாற்றியதற்காக 2019-ம் ஆண்டு 10 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்ததும்,
பின்னர் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் இதேபோன்று தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 24 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக அவரை கைது செய்து அவரிடமிருந்து 4,00,100/- ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.