கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் மேகலா என்பவர் 27.12.2021 ஆம் தேதி மதியம் பர்கூரில் உள்ள இந்தியன் பேங்க் ATM மில் பணம் எடுத்த போது பணம் வரவில்லை என கூறவே அருகில் இருந்த இரண்டு நபர்கள் பணம் எடுத்து தருவதாக ATM கார்டை வாங்கி பின்னர் உடனே கொடுத்து விட்டதாகவும் ATM கார்டை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் ATM மிற்கு சென்று பணம் எடுக்க ATM கார்டை எடுத்தபோது .ATM கார்டு மாற்றி கொடுத்திருப்பது தெரிந்தது.
மேகலா அசல் ATM கார்டை எடுத்துக்கொண்டு போலியான கார்டை கொடுத்து 30 ஆயிரம் பணம் திருடி விட்டதாக பர்கூர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து 30.12.2021 ஆம் தேதி பணம் திருடிய இரண்டு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.