விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 31.10.2019 ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளீஸ்வரி கல்லூரியில் உள்ள TMB ATM சென்டருக்கு கடந்த 13.10.2019 அன்று மத்தியசேனை கிழக்கு தெருவை சேர்ந்த சேர்ந்த பரமன்(46) என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். பணத்தை எடுப்பதற்கு வங்கி காப்பாளரான குருமூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்த விநாயகமூர்த்தி(51) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். விநாயகமூர்த்தி ATM-ல் பணத்தை எடுத்து பரமனிடம் கொடுத்துவிட்டு பரமனின் ATM CARD- ற்கு பதிலாக வேறு ஒரு ATM CARD- ஐ கொடுத்து அனுப்பிவிட்டு பரமனின் ATM CARD- லிருந்து ₹13,000/- பணத்தை எடுத்து செலவு செய்து வந்துள்ளார். பரமனின் வீட்டார் இது வேறு ஒருவருடைய ATM CARD என்று கண்டறிந்து காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரை தொடர்ந்து உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் அவர்கள் U/S.420 IPC பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட தீவிர விசாரணையில் ATM- ஐ பயன்படுத்தி பணத்தை திருடியது ATM காப்பாள ரான விநாயகமூர்த்தி என்பதை கண்டுபிடித்து கைது செய்தார்.