திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் – ஏடிஎம் கொள்ளை வழக்கில்
6-வது குற்றவாளி கைது, கண்டெய்னர் லாரி பறிமுதல். கடந்த 12.02.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ATM மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம்
இயந்திரங்களை உடைத்து ரூபாய்.72,79,000/- பணத்தை திருடர்கள் கொள்ளையடித்தனர்.
தகவலறிந்தவுடன் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி, வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் Dr.M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், காவல் கண்காணிப்பாளர்கள் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., திருவண்ணாமலை மாவட்டம், திரு. S.ராஜேஷ் கண்ணன், இ.கா.ப., வேலூர்
மாவட்டம், Dr.K.S.பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., ராணிப்பேட்டை மாவட்டம் ஆகியோர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
திவிர விசாரணையில்,இச்சம்பவத்தல் வெளிமாநிலத்தை சேர்ந்த 6 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவ்வழக்கில் ஏற்கனவே ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 5,00,000/- பணத்தையும், இரண்டு கார்களையும் கைப்பற்றிய நிலையில் இன்று (14.03.2023) தேதி இவ்வழக்கில் தொடர்புடைய சிராஜுதின் வ/50 த/பெ சிரதரா, ஜவாந்தி குர்த் கிராமம், திஜாரா வட்டம், ஆல்வார் மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம் என்பவரை கர்நாடகா மாநில எல்லையருகே தனிப்படையினர் கைது செய்து கொள்ளைக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.