சேலம் : சேலம் கடந்த (21.02.23), ஆம் தேதி இரவு தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லை தீவட்டிப்பட்டி to பொம்மியம்பட்டி மெயின் ரோடு சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள India one ATM மை மூன்று நபர்கள் திருடமுயற்சி செய்து ஏ.டி.எம் மிஷின் தகடை உடைத்துள்ளனர். அந்த வழியாக இரவு ரோந்து சென்ற முதல் நிலை காவலர் திருமதி.தெய்வராணி மற்றும் நர்மதா ஆகிய இருவரும் ஏ.டி.எம் அருகில் சென்று பார்த்த பொழுது மூன்று நபர்கள் இருந்துள்ளனர். காவல்துறையினரை பார்த்தவுடன் அதில் ஒருவர் செருப்பை விட்டு விட்டு ஓடி விட்டார் மற்ற இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர். இது சம்மந்தமாக உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டதில் ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ் அவர்கள் செருப்பு இல்லாமல் சந்தேகப்படும்படியாக சந்தைப்பேட்டை அருகில் ஒருவர் இருப்பதாக கொடுத்த தகவலின் படி பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் உடனடியாக சென்று சந்தேக நபரை பிடித்து விசாரணை செய்ததில் ஏற்காடு கொளகூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்றும் அவருடன் வந்தவர்கள் சேலம் குகை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்றும் இவரது உறவினர் தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி அடுத்த தேவரசம்பட்டியைச் சேர்ந்த ராமர் (எ) குட்டி பையன் என்று தெரியவந்தது. லட்சுமன் அளித்த தகவலின் பெயரில் ஆனந்தனை கைது செய்தனர். மேலும் இரவு ரோந்து பணியின் துரித நடவடிக்கையால் ஏ.டி.எம் கொள்ளையை தடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இது சம்மந்தமாக காவல்துறை தலைவர் மேற்கு மண்டலம் திரு.சுதாகர் இ.கா.ப அவர்கள் திரு.செந்தில்குமார் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் முதல் நிலை காவலர் திருமதி.தெய்வராணி, திருமதி.நர்மதா இரண்டாம் நிலை காவலர் திரு.சந்திரன் மற்றும் திரு.சந்தோஷ் தீவட்டிப்பட்டி ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் வழங்கினார்.