சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தானாவயலைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி 12.01.2021 அன்று தனது கணவருடன் வெளியே சென்று திரும்பும்போது கணவர் ஏ.டி.எம் கார்டு மற்றும் பணத்துடன் பர்சை கீழே தவற விட்டுவிட்டார். இதைத்தொடர்ந்து 02.02.2021 அன்று பர்சை எடுத்த அடையாளம் தெரியாத நபர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணத்தை திருடியது அப்பெண்மணிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அப்பெண்மணி அளித்த புகாரின்பேரில் ஆறாவயல் போலீசார் தீவிர விசாரணை செய்து ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட சுபாஷ் மற்றும் பிரபு ஆகிய 2 நபர்கள் மீது u/s.379 IPC -ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி