திருவாரூர்: திருவாரூர்மாவட்டம், திருவாரூர் தாலுக்கா காவல் சரகம், கூடூர் கடைதெருவில் SBI ATM இயந்திரத்தை இன்று (19.06.2021) அதிகாலை 01.30 மணியளவில் மர்ம நபர்கள் நான்கு பேர் உடைக்க முற்பட்ட போது, தகவலறிந்த மேற்படி SBI ATM அமைந்துள்ள Complex உரிமையாளர் திரு. தமிழரசன் என்பவர் அங்கு வந்த போது, அவரை கண்ட மர்ம நபர்கள் அவரை Screw Driver ஆல் நெஞ்சில் குத்தி விட்டு தப்பி சென்றனர். இச்சம்பவத்தில் மேற்படி தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை பிடிக்க மாவட்டத்தில் அனைத்து இரவு ரோந்து அலுவலர்கள் மற்றும் ரோந்து காவலர்கள் உஷார் செய்யப்பட்டு, வாகன தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (19.06.2021) காலை 05.30 மணிக்கு Honda Dream TN 39 BL 1845 என்ற இருசக்கர வாகனத்தில் 1) விஜய் (19), த/பெ. பன்னீர்செல்வம், ஊட்டியானி, வடபாதிமங்கலம் 2) பிரதாப் (18), த/பெ.குமார், இளமங்கலம், வடபாதிமங்கலம் 3) மதன் (19), த/பெ.ரமேஷ், அண்ணா காலனி, கூத்தாநல்லூர் ஆகிய மூவரும் தப்பிச் சென்ற போது வடபாதிமங்கலம் காவல் சரகம், வடகட்டளை என்ற இடத்தில் வாய்கால் மதகு கட்டையில் மோதி விபத்துக்குள்ளாகி மூவருக்கும் காயம்பட்டதன் பேரில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாரணையில் மேற்படி முவருடன் ஆகாஷ் (19), த/பெ அசோகன், புள்ளமங்கலம் என்பவரும் சேர்ந்து கூடுர் SBI ATM கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது பிடிக்க வந்த தமிழரசன் என்பவரை திருப்புளியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. மேற்படி வங்கி ATM கொள்ளை முயற்சி மற்றும் தமிழரசன் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய குற்ற எண் 617/21, u/s 457, 380, 511, 506 (ii), 302 IPC r/w 34 IPC ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி 3 ஆகாஷ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மேற்படி மூன்று எதிரிகளும் இருச்சக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற போது, வாகன விபத்துக்குள்ளானது சம்பந்தமாக வடபாதிமங்கலம் காவல் நிலைய குற்ற எண்: 185/21, u/s 279, 337 IPC ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு தனியாக புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. வங்கி ATM கொள்ளை முயற்சி மற்றும் தமிழரசன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு சக்கர வாகன விபத்தில் காயம்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் எதிரிகள் 1) விஜய்,
2) பிரதாப் மற்றும் 3) மதன் ஆகியோர்களை கைது செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களை திருவாருர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து மேற்படி மூன்று எதிரிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கு புலன் விசாரணையில் உள்ளது.