இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்,IPS., அவர்கள் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட தீவிர குற்றத்தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கு இராமேஸ்வரம் பகுதியில் கொகைன் (COCAINE) என்ற போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த இருப்பதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து இராமேஸ்வரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையின் படியும், நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.கண்ணதாசன், சார்பு ஆய்வாளர் திரு.சதீஷ், மண்டபம் சார்பு ஆய்வாளர் திரு.கோட்டைசாமி மற்றும் உச்சிப்புளி சார்பு ஆய்வாளர் திரு.முருகநாதன் மற்றும் காவலர்கள் இராமேஸ்வரம் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று 10.02.2022-ம் தேதி அதிகாலை 04.00 மணியளவில் இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவலர்களை கண்டதும் ஓட முயன்றவர்களை சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் அரசால் தடைசெய்யப்பட்ட கொகைன் (COCAINE) எனும் போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
மேலும் தொடர் விசாரணையில் சூரியகுமார் 27/22, மனோஜ் 20/22, ஜோசப் பாஸ்டின் குமார் 23/22, சந்தியா ரேமண்ட் 23/22, முஹம்மது இஸ்மாயில் 32/22, அங்கு ராமர் 36/22, சாதிக் 36/22, பாலமுருகன் 31/22 ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. முலும் ,அவர்களிடமிருந்து 1.5 கிலோ கொகைன் (COCAINE) பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 90 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை