இராமநாதபுரம்: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமேஸ்வரம் உட்கோட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், அம்பேத்கர் நகர் மற்றும் பெரியார் நகர் பகுதிகளில் வாழும் 90 ஏழைக் குடும்பங்களுக்கு, மண்டபம் லிபர்டி, பேபி மரைன், ராஜா கல்வி குழுமம், ARC மீன் கம்பெனி, பாலன் மீன் கம்பெனி, மரைக்காயர் ட்ரஸ்ட், SB மீன் கம்பெனி மற்றும் சம்மாட்டி பெட்ரோல் பங்க் ஆகியோரின் பொருளுதவியுடன், இராமேஸ்வரம் உட்கோட்ட (பொறுப்பு) துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.திருமலை அவர்கள் அரிசி உள்பட 10 வகையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியானது மண்டபம் காவல் ஆய்வாளர் திருமதி.ஜாக்குலின், சார்பு ஆய்வாளர் திரு.கோட்டைச்சாமி, தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.பரமகுருநாதன் மற்றும் தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு.கேசவன் ஆகியோர் ஏற்பாட்டின்படி நடைபெற்றது.