காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷ்ணுகாஞ்சி வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் ஆகிய காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு ரவுடிகளான 1) சுரேஷ் ( எ ) கரண்ட் சுரேஷ் 26
கோட்ராம்பாளையம் தெரு, காஞ்சிபுரம், 2 ) குமரன் (37 பிள்ளையார் கோயில் தெரு, புத்தகரம், வாலாஜாபாத் தாலுக்கா மற்றும் 3 ) தயாளன் 40 . ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச – ன்படி விஷ்ணுகாஞ்சி மற்றும் வாலாஜாபாத் காவல்நிலைய காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படியும், மேலும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு ரவுடிகளான
1) விஜயகுமார் 35 2 ) சுந்தர் 27 V.R.P சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா 3 ) ஜலாபதி 24 4 ) பிரசாந்த் 28 5 )சூர்யா 39 மற்றும் 6)சுரேஷ் 30 ஆகியோர்கள் மீது பிரிவு 107 கு.வி.மு.ச – ன்படி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல்நிலைய காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படியும், வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர்கள் மேற்படி நபர்கள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்