குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.இரா.ஸ்டாலின் IPS அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த நான்கு பேர், அதிவேகமாக அபாயகரமாக வாகனம் ஓட்டி வந்த 40 பேர், கனரக வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும்போது 16 டயர்களை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு மீறி ஓட்டி சென்ற 45 பேர் உட்பட 89 வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
வாகன ஓட்டுநர்கள் சமுதாய அக்கறையுடன், சாலை விதிகளை மதித்து பொறுப்புடன் செயல்பட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எடுக்கும் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.