சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நீதித்துறையில் வேலை வாங்கித் தருவதாக, ரூ.85 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்தனர். கோட்டையூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் பழனி செல்வம் (43) இவரது அண்ணன் மகளுக்கு நீதித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கோட்டையூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த, முத்து மகன் பாலாஜி (55) மற்றும் சென்னை ஆவடி பால சுப்பிரமணியன் (41), இருவரும் 2019ல் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் பெற்றுள்ளனர்.வேலை வாங்கித் தராததோடு பணத்தையும் திருப்பித் தராமல் இருந்துள்ளனர். இதுகுறித்து பழனி செல்வம் கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி போலீசார் அவ்விருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.போலீசார் மோசடியில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.85 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. மோசடியில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி