மதுரை: மதுரை சோழவந்தான் தேர்தல் பறக்கும் படை அதிகாரி திரு. தினேஷ் குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் திரு. கண்ணன் ஏட்டுகள் திரு. பூமா ஆறுமுகம் ஆகியோர் சோழவந்தான் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண் டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த குருவித்துறை வேன் டிரைவர் பாண்டி செல்வன் காரை மறித்து சோதனை செய்த போது ,அதில் தேர்தல் விதிமுறை மீறி எந்த ஒரு ஆவணமும் இன்றி வைக்கப்பட்டிருந்த 84 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், வாடிப்பட்டியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி திரு. முத்துக்கிருஷ்ணன் மேற்பார்வையில் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உடன், வட்டாட்சியர் திரு. மூர்த்தி, துணை வட்டாட்சியர் திரு. அழகாபுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி