கள்ளக்குறிச்சி: பொங்கல் திருநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோமுகி டேம், பெரியார் நீர்விழ்ச்சி ஆகிய சுற்றுளா தளங்கள் ஆற்றுத்திருவிழா, விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனைக்குறிய இடங்கள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவஹர்லால் தலைமையில் 6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் ஆய்வாளர்கள், 113 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 700 காவலர்கள் என மொத்தம் 840 காவல்துறையிரைக் கொண்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பண்டிகை நாட்களில் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், 6 மதுவிலக்கு சிறப்பு காவல் தனிப்படை அமைத்தும் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு சாராய ஊரல்களை அழித்து வருகின்றனர். சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பனை பற்றிய தகவல்களை தெரிவிக்கும் மாவட்ட காவல் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண் 7358154100 மற்றும் மின்னஞ்சல் முகவரி klkdrugsfreesociety@gmail.com ஆகியவை ஆங்காங்கே பொதுமக்கள் பார்க்கும் இடங்களில் வைக்கபட்டுள்ளது.
இந்த பண்டிகை நாட்களில் இரகசிய தகவலின் பேரில் இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு சட்டவிரோதமாக பதுக்கிவைக்கபட்டுள்ள நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டில் சோதனை செய்து இதுவரை 2 நாட்டுதுப்பாக்கிகள் கண்யறியப்பட்டு மூன்று நபர்கள் கைது செய்யபட்டுள்ள நிலையில் தனிப்படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் சூதாட்டம் நடைபெறும் இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் சாலை விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கையாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. விஜய் கார்த்திக் ராஜா அவர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் விபத்து நடந்த 24 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் காவல்துறையினர் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மற்றும் சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பொங்கல் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்கி எவ்வித அசம்பாவிதமும் ஏற்ப்படாமல் மகிழ்ச்சியாக கொண்டாடுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.