திருவாரூர்: தமிழக அரசின் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை மீறி கடந்த மூன்று தினங்களாக வெளியில் சுற்றித்திரிந்த 830 வாகனங்கள் பறிமுதல்.செய்து வழக்குப்பதிவு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்ளின் தொடர் அதிரடிநடவடிக்கை கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கவும்,பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் நேரடி பார்வையில் கடந்த 24.05.21 முதல் 26.05.21 வரை மூன்று தினங்களாக
மாவட்டம் முழுவதும் தொடர் வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இதில் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல்பொதுமக்கள் மற்றும் தன் குடும்பத்தின்மீது அக்கறையில்லாமல் காரணமின்றி வெளியில் சுற்றித்திரிந்த
830 பேர் கைது செய்யப்பட்டு 830 வாகனங்கள் (2 WHEELER:823 4-Wheeler:03 Others:04)பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று தினங்களில் முகக்கவசம் அணியாமல் வெளியில்
வந்த நபர்கள் மீது 332 வழக்குகளும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள்மீது 33 வழக்குகளும்மொத்தம் 365 வழக்குகள் பதிவு செய்து ரூ 82,900 அபராதம் வசூலிக்கப்பட்டுஅதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் இதனை தொடர்ந்து
ஊரடங்கு காலத்தில் வாகனங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
திருவாரூர் மாவட்ட காவல்துறை…