இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொண்டு பொது அமைதியை காக்கும் வகையில் காவல்துறையினர் அந்தந்த காவல் நிலைய கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து சுற்றி தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டில் மட்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 168 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 827 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.