சேலம் : சேலம் மாவட்ட ஓமலூர் உட்கோட்டம், தாரமங்கலம் காவல் நிலைய பகுதியை சேர்ந்த தான் வளவு பெரிய சோரகை சேர்ந்த எண்பது வயது மூதாட்டியை கடந்த (24/10/2021) ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் தனது தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இரண்டு குற்றவாளிகள் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரிடம் வாக்குமூலம் பெற்று ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சட்டப்பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் சீனிவாசன் (20) முரசன் வளவு தேங்காய் கொட்டாய் பெரிய சோறதை கிராமம் மேட்டூர் விக்னேஷ் (23) கல்யாணசுந்தரம் முரசன் வளவு தேங்காய் கொட்டாய் பெரிய சோரகை கிராமம் மேட்டூர் ஆகியவரை கடந்த (31/10/2021) தேதி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி.இந்திரா அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும் கடந்த (19/1/2022)-ம் தேதி குற்றவாளிகள் மீது பாலியல் தாக்குதல் குற்றவாளிகளின் கீழ் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் காவல் ஆய்வாளர் இவ்வழக்கில் விரைவாக சேலம் மகிலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை முடிவில் நேற்று மேற்கண்ட குற்றவாளிகள் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக நீதிபதி திருமதி.ஜெயந்தி அவர்களால் ஆயுள் முழுவதும் சிறை தண்டனையும் தலா 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மேலும் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் திருமதி.பத்மா அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார் விசாரணை அதிகாரியான திருமதி.இந்திரா ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்