இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவல்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு.சரவணன் மற்றும் திரு.விக்னேஷ்வரன் அவர்களின் தலைமையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில்
செவல்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த பொியசாமி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் COTPA ACT-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் அவர்களிடமிருந்து 80 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.