மதுரை: மதுரை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்ட தனிப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு உட்பட்ட வரிச்சூர் ஏரியாவில், மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் ரோந்து சென்றபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை விற்பனைக்கு வைத்திருந்த ராதா கிருஷ்ணன் 32., கைது செய்தனர்.
மேற்படி, கைது செய்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் சுமார் 80 கிலோ பறிமுதல் செய்து ,மற்றும் அந்த நபர் பயன் படுத்திய நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, மேற்படி நபர் மீது கருப்பாயூரணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும், இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்குபவர்கள், மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன், தெரிவித்
துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி