திருநெல்வேலி : நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AR லைன் தாமஸ் தெருவில் உள்ள கிருஷ்ணஜோதி குமார் (38), வீட்டில் வளர்த்த ரூபாய் முப்பதாயிரம் மதிப்புடைய கன்னி பிரீட் நாய் (18-07-2022), ம் தேதியன்று, காணவில்லை என பெருமாள்புரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த, பெருமாள்புரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயலட்சுமி, அவர்கள், காவல் உதவி ஆய்வாளர் திரு.நயினார், அவர்கள் மற்றும்காவல்துறையினர், நெல்லை மாநகரம் முழுவதும் சுமார் 80 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, ஸ்ரீவைகுண்டம் நாவலடியூரை சேர்ந்த முத்துராஜ் (31), மற்றும் சந்திப்பு கருப்பன் துறையைச் சேர்ந்த கார்த்திக் (27), என்பவர்களை (02-08-2022), ம் தேதியன்று, அடையாளம் கண்டுபிடித்தனர்.
அவர்கள் குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் 1 மற்றும் முப்பதாயிரம் ரூபாய் நாய் ஆகியவற்றை கைப்பற்றி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆனையாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள், மற்றும் மேலப்பாளையம் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.சதிஷ் குமார், அவர்கள் மற்றும் பெருமாள்புரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயலட்சுமி, அவர்கள் ஆகியோர் மீட்கப்பட்ட நாயை உரியவரிடம் ஒப்படைத்தார்கள்.