திருப்பத்தூர்: கேரள மாநிலம் ஆலப்புழா, வடக்கல் பகுதியை சேர்ந்தவர் ரவி ராஜேந்திரா என்பவரின் மகன் சாரெட் சன்னி(35). இவர் கடந்த 24 ஆம் தேதி சென்னையில் இருந்து ஆலப்புழா நோக்கி செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதன முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை எண் 19 இல் பயணம் செய்தார்.
ரயில் நள்ளிரவு ஜோலார்பேட்டை -காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது சாரெட் சன்னி தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இவர் வைத்துயிருந்த பையில் தங்க செயின், தங்க மோதிரம், பிராஸ் லெட் உள்ளிட்ட 68 கிராம் மதிப்புள்ள 8 1/2 தங்க நகைகள் மற்றும் மொபைல் ரொக்க பணம் ரூபாய் 50 திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஆலப்புழா ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடம் என்பதால் வழக்கு பதிவு செய்து அதனை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் ஓடும் ரயிலில் நகை, பணம், செல்போன் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றன.