உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இன்று பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா தையல் இயந்திரம் உள்ளிட்ட ரூபாய் 8 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கூறினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சி தலைவராக இருந்தார். மு க ஸ்டாலின் மக்களுக்கு உறுதி அளித்தார். அதில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் இந்த திட்டத்தின் கீழ் உங்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை தனி அதிகாரிகளை நியமித்து உரிய முறையில் தீர்வு காண்பேன் என உறுதி அளித்திருந்தார். அதன்படி இன்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
இது சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமிநாதர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா தையல் இயந்திரங்கள் மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட ரூபாய் 8 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றி வருகிறார். அதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 16 ஆயிரத்து 421 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 14139 மனுக்கள் முடிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 3017 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. 2763 மனுக்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 ஆயிரத்து 646 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அவர்கள் இந்த மனுக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இந்த மனுக்கள் அனைத்தும் 100 நாட்களுக்குள் தேர்வுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் தொகுதி எம் எல் ஏ வி. ஜி ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ டி ஜே எஸ் கோவிந்தராஜ், திருத்தணி எம்எல்ஏ சந்திரன், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.G. ஏழுமலை