சிவகங்கை: 78வது ”சுதந்திர தினம்” சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.08.2024) காலை 09.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
காவல் ஆய்வாளர் திரு.சிவா, தலைமையில் சிவகங்கை ஆயுதப்படை காவல்துறையினரின் 1வது படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் திரு.ரவிவர்மா, 2வது பெண் காவலர்கள் படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் திருமதி. சங்கரேஸ்வரி மற்றும் 3வது படைப்பிரிவின் கமாண்டராக சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து, காவல்துறை அணிவகுப்பு மிக கம்பீரமாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிவகங்கை மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் , உதவி ஆய்வாளர், காவலர்கள் உட்பட 61 பேர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.