திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு தற்போது மனம் திருந்தி வாழும் 76 நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் புனர்மறுவாழ்வு நிதிக்காக பரிந்துரை செய்யப்பட்டு, மேற்படி 76 நபர்களுக்கு ரூ.22,80,000/- ஒதுக்கப்பட்டு, அதில் பயனாளிகளுக்கு கறவை மாடுகள் மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்கள், மதுவிலக்கு அமல்பிரிவு துணை கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர்களால் 76 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்