கோவை : R.S. புரம் பகுதியில் கடந்த 18.12.2019 அன்று ஆதரவற்ற நிலையில் இருந்த 75 வயது மூதாட்டியை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக R.S.புரம் B2 காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் R.S.புரம் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைப்பு செய்தனர்.
தனது பெயரும், முகவரியும் சொல்ல இயலாத நிலையில் 2 நாள் ஒய்வுக்குப்பின் தனது பெயர் கனகம்மாள் எனவும், வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ஞாபக மறதி காரணமாக 13.12.2019 முதல் சாலையில் தங்கி இருந்ததாகவும், தன்னை வீட்டில் ஒப்படைக்க உதவுமாறு வேண்டினார், மூதாட்டி கனகம்மாள்.
விபரம் What’s app மூலமும், நாளிதழ் மூலமும் வந்த செய்தியை பார்த்த மூதாட்டியின் மகன், மருமகள், பேரன்கள் ஆகியோர் ஒண்டிபுதூர், இருகூரில் இருந்து மாநகராட்சி காப்பகத்திற்கு வந்து மூதாட்டியை பார்த்தார்கள். 11 நாட்களாக உறவினர் வீடு, பஸ் நிலையம், சாலை ஓரங்களில், பஸ் ஸ்டாப்- கள், அரசு மருத்துவமனை, I.C.U வார்டு விபத்து பிரிவு என எல்லா இடங்களிலும் தேடினோம்.இதனிடையில் பாதுகாப்பாக மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ளார் என்ற விபரம் அறிந்து நிம்மதி அடைந்தோம் – என மகன் உருக்கமுடன் கூறினார். கோவை மாநகராட்சிக்கும், மாநகர காவல் துறைக்கும், நன்றி கூறி வீட்டிற்க்கு மூதாட்டியை அழைத்துச் சென்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்