சென்னை : சென்னை மத்திய குற்றப்பிரிவு (வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு) காவல் ஆய்வாளர் திரு.புஷ்பராஜ் அவர்கள் அளித்த விசாரணை அறிக்கையில், விஸ்வாஸ் ( எ ) விஸ்வேஸ்வர் என்பவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை பதிவாளராக வேலை செய்து வரும் பார்த்தசாரதியின் பதவியை பயன்படுத்தி கொண்டு ,பார்த்தசாரதி உதவியுடனும் மற்ற குற்றவாளிகளான வள்ளி இளங்கோ , சூலைபுதூர் ராமசாமி , இளங்கோவன் , ராஜபாண்டி , ராஜீ , ஆறுமுகம் மற்றும் ரவிந்தர்ராஜா ஆகிய ஏஜெண்டுகளை வைத்துக்கொண்டு அண்ணா யூனிவர்சிட்டியில் PRO வேலைக்கு ரூ . 15 லட்சம்- TNEB – ல் AE வேலைக்கு ரூ .10 லட்சம் , JA வேலைக்கு ரூ . 8 லட்சம் , OA வேலைக்கு ரூ . 3 லட்சம் , ஆசிரியர் வேலைக்கு ரூ . 10 லட்சம் என பணம் கொடுத்தால் வேலை பெற்றுத்தருவதாக கூறி வேலை தேடும் அப்பாவி இளைஞர்கள் 75 நபர்களிடம ஸ்ரீபாய் 3.29 கோடி பணத்தை பெற்று அதில் மேற்படி ஏஜெண்டுகளுக்கு கமிஷன் கொடுத்தும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததுடன் போலியான வேலை வாய்ப்பு உத்தரவுகளை வழங்கி மோசடி செய்துள்ளனர்.
வேலை தேடும் இளைஞர்களிடம் இருந்து பணத்தை இந்த ஏஜெண்டுகள் மூலம் நேரடியாகவும் மற்றும் வங்கிகள் மூலம் எதிரி விஸ்வேஸ்வரன் பெற்று கொண்டு , இந்த ஏஜெண்டுகளுக்கு ஒரு நபருக்கு ஸ்ரீபாய் 50,000 / – முதல் 1 லட்சம் வரை கமிஷன் கொடுத்து மோசடி செய்து ஆதாயம் அடைந்துள்ளது தெரிய வருவதாக கொடுத்த அறிக்கையின் பேரில் 25.10.2019 – ம் தேதி மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில புலன் விசாரணையில் அண்ணா யூனிவரிசிட்டியில் துணை பதிவாளராக பணிபுரிந்து வரும் பார்த்தசாரதி அவரின் மகன் விஷ்வேஷ்வர் @ விஷ்வேஷ்வரன் மற்றும் மற்ற எதிரிகளான ஏஜெண்டுகள் வள்ளி இளங்கோ ,சூலைபுதூர் ராமசாமி , இளங்கோவன் , ராஜபாண்டி , ராஜி ஆறுமுகம் மற்றும் ரவிந்தர்ராஜா ஆகிய ஏஜெண்டுகள் துணையுடன் அண்ணா யூனிவர்சிட்டி , பொது பணி துறை , மின்சார துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வேலை தேடும் அப்பாவி இளைஞர்கள் 75 நபரிடம் ஸ்ரீபாய் 3,28,99,000 / பணத்தை பெற்றுகொண்டு அதில் மேற்படி ஏஜெண்டுக்களுக்கு கமிஷன் கொடுத்தும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததுடன் போலியான வேலை வாய்ப்பு உத்தரவுகளை வழங்கி மோசடி செய்துள்ளனர்.
இதனையடுத்து, விவேஸ்வரன் , வள்ளி இளங்கோ , சூலைபுதூர் ராமசாமி , இளங்கோவன் , ராஜபாண்டி , ராஜி ,ஆறுமுகம் , தெய்வசிகாமணி ஆகியோர்களை முறையே 25.10.2019 , 5.11.2019 மற்றும் 17.2.2021 ஆகிய தேதிகளில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் .
மேலும் விசாரணிையல் சூளைபுதூர் ராமசாமி அவர் வேலை தேடுபவர்களிடம் வசூல் செய்த ருபாய் 1 கோடி பணத்தில் ருபாய் 40 லட்சத்தை எதிரி A2 பார்த்தசாரதி வீட்டில் வைத்து , அவரின் மகன் விஸ்வேஸ்வரனிடம் பார்த்தசாரதி முன்னிலையில் கொடுத்துள்ளார் என்பதும் , மீதி பணத்தை விஸவேஷ்வரிடம் நேரிலும் , வங்கியிலும் செலுத்தியுள்ளார் எனவும் விசாரணையில் தெரிய வருகிறது . எனவே விசாரணையில் பார்த்சாரதி அவர் மகன் விஷ்வேஸ்வருடன் சேர்ந்து கொண்டு மேற்படி மோசடி செயலுக்கு உதவியாக இருந்துள்ளார் என்பதும் , தன் அரசாங்க பணியை தவறாக பயன்படுத்தி பல நபர்களிடம் பணத்தை பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்ததால் , அண்ணா பல்கலைகழகத்தில் துணை பதிவாளராக வேலை செய்து வரும் பார்த்தசாரதி என்பவரை 01.03.2021 அன்று கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்